Skip to main content

Posts

Showing posts from June, 2025

எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு

30/06/25 நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கவுள்ளதாக இலங்கையின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது    பின்வருமாறு எரிபொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளது A0013L99 லங்கா சூப்பர் டீசல் ப.வி 274.00.  15.00 புதிய விலை289.00 A0017L99.    லங்கா ஆட்டோடீசல் ப.வி178.00  07.00    பு.விலை  185.00 A0023L99    லங்கா பெட்ரோல் 92ஒக்டேன் ப.வி293.00  12.00. பு.விலை.305.00 என்ற வகையில் அதிகரித்துள்ளது. தகவல்:-இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் 30/06/2025

இலங்கை A அணியில் முஹம்மட் சிராஸ்

 இலங்கை ‘A’ அணி – ஆஸ்திரேலியா பயணம் 2025 இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால், ஆஸ்திரேலியா ‘A’ அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் மற்றும் நான்கு நாள் தொடரில் பங்கேற்க கீழ்க்கண்ட இலங்கை ‘A’ அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த அணிகள் இன்று மாலை ஆஸ்திரேலியா நோக்கி புறப்படும். ஒருநாள் தொடர் ஜூலை 4, 6, மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும். இரண்டு நான்கு நாள் போட்டிகள் ஜூலை 13–16 மற்றும் ஜூலை 20–23 தேதிகளில் நடைபெறும். அனைத்து போட்டிகளும் டார்வினில் நடைபெறும். தகவல்:- இலங்கை கிரிக்கெட் முகநூல் 30/06/2025

வீதி மின்விளக்கு திருத்தம்.

 கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் தலைமையில் வீதி மின் விளக்கு பொறுத்தும் நிகழ்வு கல்பிட்டியின் பிரதேச உறுப்பினர் AR.முஸம்மில் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் கற்பிட்டி புதுக்குடியிருப்பு கிராமத்துக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது இதில் கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் Asm றிகாஸ் அவர்களும் கலந்துகொண்டார். தகவல்:-Ar.முஸம்மில்( பி.ச.உ.கல்பிட்டி)                   

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல்

  🔷 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடியது 🔸 பாராளுமன்ற மேம்பாட்டு செயற்றிட்டம் 2024/2027 இன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டடத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா பெண் பாராளுமன்ற ஒன்றியத்துடன் கலந்துரையாடினார் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்துக் கலந்துரையாடும் கூட்டமொன்று ஒன்றியத்தின் தலைவர் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்களின் தலைமையில் 20.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பெண்களைத் தெரிவுசெய்வது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களைச் சந்திப்பது, பத்தாவது பாராளுமன்றத்தில் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் உருவாக்குவது, பாராளுமன்றத்திற்குள் பகல்நேர பராமரிப்பு நிலையமொன...

பேரீத்தம் பழம் அறுவடை

 இலங்கையில் காத்தான்குடியில் வீதியோரம் அழகுக்காக வைக்கப்பட்டுள்ள பேரீத்தம்பழங்களின் அறுவடையானது இன்றைய தினம் நடைபெற்றது. 29/06/2025

ஆஸி அணி வெற்றி

 அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 159ஓட்டங்களால் வெற்றிபெற்றது அவுஸ்திரேலியா  முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி யாரும் எதிர்பாராத விதமாக 180ஓட்டங்களுக்குள் சுருண்டது   ஹெட்-59 கவாஜா-47 கம்மின்ஸ் -18    இதுவே ஆஸி அணியின் அதிகபட்சமான ஓட்டமாக இருந்தது.  மேற்கிந்தித தீவுகள் சார்பாக பந்துவீச்சில்  ஜெய்டன் சேல்ஸ்-5 விக்கட்டுகளையும் சமர் ஜொசப்-4விக்கெட்டுக்களையும் ஜெஸ்டின் கிரேவேஸ் 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். மறுபுரத்தில் தனது முதலாவது இன்னிங்க்சை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக சாய் கோப்-48 ரேஸ்டன் ச்சேஸ்-44 பிரண்ட்ன் கிங்-26 ஓட்டங்களைப்பெற 190ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது. ஆஸி அணி சார்பாக   மிச்சல் மார்ஸ்-3 ஹெசல்வூட்,கம்மின்ஸ்,வேப்சட் தலா 2விக்கெட்டுக்களையும், லயன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.  மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந் அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 310 என்ற வெற்றி இலக்கை தீர்மானித்தது இதில்   அலக்ஸ் கேரி 65, வ...

தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

 பங்களாதேஷ் மற்றும் இலங்கை இரு அணிகளுக்குமான 2து டெஸ்ட் போட்டியில்    இலங்கை அணி 78ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.  தனது முதல் இன்னிங்சில் பங்களாதேஷ்  247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இதை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி 458 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்து பங்களாதேஷ் அணியை விட மேலதிகமாக 211ஓட்டங்களை பெற்றிருந்தது.  மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பங்களாதேஷ் அணியானது 133ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது,இதில் பங்களாதேஷ் சார்பாக முஸ்பிகூர் ரஹீம் 26, அனாமுல் ஹக் 19,மொமினுல் 15,சட்மான் இஸ்லாம் 12ஓட்டங்களை பெற்றனர். இலங்கை சார்பாக பந்துவீச்சில் பிரபாத் ஜயசூர்யா 5விக்கெட்டுக்களையும்,தனஞ்சய டி சில்வா ,ரத்னாயக்க தலா 2விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். இலங்கை அணியானது 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1சமநிலை 1வெற்றி என்ற அடிப்படையில் வெற்றிபெற்றுள்ளது.

தலுவ பகுதியில் விபத்து

 பஸ் மற்றும் லொறி விபத்துக்குள்ளானது. கற்பிட்டி  தலுவை பகுதியில் இன்று அதிகாலை சிறிய பஸ் ஒன்றுடன் லொறி ஒன்று மோதியதில் லொறி மற்றும் பஸ் இரண்டு வாகனங்களும் பாதை விட்டு விலகி கானில் விழுந்துள்ளது இதில் இரண்டு வாகங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தள தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கற்பிட்டியில் சிக்கிய போதைமாத்திரைகள்

 கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரையில் 4 பொதிகளில் 3 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளை கைப்பற்றிய பொலிஸார். கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 4 பொதிகளில் சுமார் 317000 மாத்திரைகளை கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை (26) இரவு மேற்கொண்ட தேடுதலின் போது கைப்பற்றப்பட்டது. கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் ஊடாக மேற்படி போதை மாத்திரை பொதிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் கைவிட்டுச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தெரிவித்தார் 27/06/2025

3ம் நாளில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை அணி

 பங்களாதேஷ் மற்றும் இலங்கை இரு அணிகளுக்குமான 2து டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் முடிவின் போது இலங்கை அணி 458ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தது பங்களாதேஷ் அணியை விடவும் மேலதிகமாக 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது . இதில் பத்தும் நிஸ்ஸங்க 158,சண்டிமல் 93,குசல் மெண்டிஸ் 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.  பங்களாதேஷ் சார்பாக தாஜுல் இஸ்லாம் 5,நயீம் ஹசம் 3,நஹீட்  1விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.   மீண்டும் தனது 2து இனிங்சை தொடர்ந்த பங்களாதேஷ் ஆரம்பம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்காமல் தடுமாறினர் இன்றைய 3து நாள் முடிவின் போது 115/6விக்கெட்டுக்களை இழந்தது இதில் முஸ்பிகூர் ரஹீம் 26,சாண்டே 19,அனாமும் 19ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றிருந்தனர். பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா  2, பிரபாத் ஜயசூரிய 2,திருண்டு 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பங்களாதேஷ் 96ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 27/06/2025   

வலுவான நிலையில் இலங்கை அணி

 பங்களாதேஷ் மற்றும் இலங்கை இரு அணிகளுக்குமான 2து டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் முடிவின் போது இலங்கை அணி 290ஓட்டங்களுக்கு 2விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இதில் பத்தும் நிஸ்ஸங்க 146*,பிரபாத் ஜயசூரியா 5* ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். சண்டிமல் 93,லஹிரு உடான 40ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளர்கள். பங்களாதேஷ் சார்பாக,தாஜுல் இஸ்லாம்,நயீம் ஹசம் தலா 1விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். 26/06/2025

உமர் பாரூக் மகா வித்தியாலயத்துக்கு புதிய அதிபர்

புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் 41 ஆவது அதிபர் M.U.M. SHAJAHAN (SLPS) புளிச்சாக்குளம் 593,  புதுக்குடியிருப்பு  என். எம். ஹபீல் கபூரி,JP) June, 26/2025 இவர் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம் மற்றும் சிலாபம் நஸ்ரியா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். ஏ.எம்.உமர் ஆசிரியர் மற்றும் எஸ்.ஹைரியா ஆகியோரின் புதல்வராவார். 1998 முதல் உமர் பாரூக் பாடசாலையின் ஆசிரியராகவும், 2013 முதல் பு/தாராக்குடிவில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியராகவும், 2016 முதல் அதே பாடசாலையின் தரம் பெற்ற அதிபராகவும் சேவையாற்றினார். 2018 முதல் மீண்டும் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும், 2024 முதல் ஆண்டிமுனை தமிழ்  மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும் கடமையாற்றிய அனுபத்தைக் கொண்டவராவார். இடைநடுவே மூன்று ஆண்டுகள் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை நிருவகிக்கும் அனுபவத்தையும் இவர் பெற்றுக் கொண்டார். அந்த வரிசையில் 2025.06.26 தொடக்கம் தான் ஆரம்பக் கல்வியைக் கற்ற புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த நியமனம் உமர...

நேபாளத்தில் புத்தளத்தைச்சார்ந்தவர் சிறப்புரை

 🏅 சர்வதேச கல்வி மாநாட்டில் MH School of Excellence அதிபருக்கு சிறப்பு மரியாதை நேபாளம், காத்மண்டு:ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நேபாள நாட்டின் காத்மண்டு மெட்ரோபொலிடியன் மாநகரத்தில் நடைபெற உள்ள சர்வதேச கல்வி மாநாட்டில், "கல்வித்திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் புதுமைகளை செயல்படுத்தல்" என்ற தலைப்பில், புத்தளத்தைச் சேர்ந்த MH School of Excellence பாடசாலையின் அதிபர் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல் சிறப்புரையாற்ற உள்ளார். இக்கல்வி மாநாடு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களின் சிந்தனைகளை பகிரும் ஒரு மேடையாக அமைகிறது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜ்மலுக்கு சிறப்பு மரியாதையும் வழங்கப்பட உள்ளது. தகவல்:-முஜாஹித் நிசார். 26/06/2025

கிராமசேவகர் காரியாலயத்துக்கு மின் இணைப்பு

25/06/2025 கற்பிட்டி பிரதேசத்தின், ஆலங்குடா கிராமத்தின். கிராமசேவகர் காரியாலயத்துக்கு ஆலங்குடா,கல்முனைக்குடிB பள்ளியின் முயற்சியினால் மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. தற்ப்போது ஆலங்குடா கிராமத்தில்  கிராம  சேவகராக A.அசீமா  அபிவிருத்தி உத்தியோகத்தராக A.H.M.சனூன் சமுர்த்தி உத்தியோகத்தராக W.M.I.மல்லிகா விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தராக. M.I.M.சலாம் என்பவர்கள் கடமையாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"போக்" உடைந்து காணப்படும் வீதி.

 (24/06/2024)கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட ஆலங்குடா கிராமத்தின் கல்முனைக்குடி A,b ஆகிய கிராமங்கள் உட்பட  ஆலங்குடாவில் பல பேர் பயன்படுத்தக்கூடிய பாதையின் நிலையே இது    இந்த பாதையின் நீர்  செல்லக்கூடிய "போக்" உடைந்துகாணப்படுகின்றது இதனால் பல வாகன சாரதிகள்,மாணவர்கள்,பொது மக்கள் என்போர் மிகவும் சிரமம்படுகின்றனர்,இரவில் புதிதாக வரக்கூடிய சாரதிகளுக்கு இது தெரியாவிட்டால் விபத்துக்களும் ஏற்படக்கூடும் எனவே விரைவாக இதனை செய்து தருமாறு கிராம மக்கள்  கல்பிட்டி பிரதேச சபையிடம்  கேட்டுக்கொள்கின்றனர்..

பட்டத்தை தனதாக்கியது தென்னாபிரிக்கா.

 2023-2025உல டெஸ்ட் தொடரில் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் லாட்ஸ் மைதானத்தில் மோதின இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய 212ஓட்டங்களுக்கு சகலவிகெட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு தனது முதலாவது இனங்சை தொடர்ந்த தொன்னாபிரிக்கா 138ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது தனது இரண்டாவது இனங்சை தொடங்கிய ஆஸி ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை பரிகெடுத்தது தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களிடம் இறுதியில்207 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 282என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்கா 5விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இதுவரையிலும் டெஸ்ட் சம்பியன் பட்டம் பெறா தென்னாபிரிக்கா பலம் பொறுந்திய அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது டெம் பவுமா தலைமையில்.