🏅 சர்வதேச கல்வி மாநாட்டில் MH School of Excellence அதிபருக்கு சிறப்பு மரியாதை
நேபாளம், காத்மண்டு:ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நேபாள நாட்டின் காத்மண்டு மெட்ரோபொலிடியன் மாநகரத்தில் நடைபெற உள்ள சர்வதேச கல்வி மாநாட்டில், "கல்வித்திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் புதுமைகளை செயல்படுத்தல்" என்ற தலைப்பில், புத்தளத்தைச் சேர்ந்த MH School of Excellence பாடசாலையின் அதிபர் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல் சிறப்புரையாற்ற உள்ளார்.
இக்கல்வி மாநாடு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களின் சிந்தனைகளை பகிரும் ஒரு மேடையாக அமைகிறது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜ்மலுக்கு சிறப்பு மரியாதையும் வழங்கப்பட உள்ளது.
தகவல்:-முஜாஹித் நிசார்.
26/06/2025
Comments
Post a Comment