Skip to main content

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல்

 


🔷 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடியது


🔸 பாராளுமன்ற மேம்பாட்டு செயற்றிட்டம் 2024/2027 இன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டடத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா பெண் பாராளுமன்ற ஒன்றியத்துடன் கலந்துரையாடினார்



பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்துக் கலந்துரையாடும் கூட்டமொன்று ஒன்றியத்தின் தலைவர் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்களின் தலைமையில் 20.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.



மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பெண்களைத் தெரிவுசெய்வது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களைச் சந்திப்பது, பத்தாவது பாராளுமன்றத்தில் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் உருவாக்குவது, பாராளுமன்றத்திற்குள் பகல்நேர பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டது.



அத்துடன், பாராளுமன்ற மேம்பாட்டு செயற்றிட்டம் 2024/2027 இன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூசா கொபோடா, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்துடன் கலந்துரையாடினார். இத்திட்டத்தின் அடிப்படையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் விடயங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, சமன்மலீ குணசிங்ஹ, ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, சட்டத்தரணி அனுஸ்கா திலகரத்ன, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தகவல்:-(பாராளுமன்ற உத்தியோகபூர்வ முகனூள்)


Comments

Popular posts from this blog

Abacusயினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சி

 ICAM Abacus கல்பிட்டி கிளையினால் நடத்தப்பட்ட *Regional Abacus Speed Maths Competition* ஜூலை 10 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஆலங்குடா Eye Institute இல்  வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ஆலங்குடா, திகழி, பள்ளிவாசல்துறை, கண்டல்குளி மற்றும் கல்பிட்டி ஆகிய கிளைகளிலிருந்தும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .  போட்டி நடைபெற்றதினத்திலே வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ICAM abacus பெயர் பொதிக்கப்பட்ட purse வழங்கப்பட்டது.. இந்நாளை வெற்றிகரமாக கழிக்கச்செய்த ICAM Abacus kalpity branch ஆசிரியைகளுக்கும் , Eye Institute க்கும்  நன்றியை தெரிவித்தனர். ஏற்பாட்டுக்குழுவினர். தகவல்:-The area Manger Alankuda Coaching Center 11/07/2025

உலமாக்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

உலமாக்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டி  ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 26/07/2025ம் திகதி ஆலங்குடா மெல்போன் மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படு இருந்தது இந்த தொடரில் கற்பிட்டி,திகழி,முதலைப்பாளி, ஆலங்குடா ஆகிய பிரதேசங்களில் இருந்து 6அணிகள் பங்குபற்றின இதில் இறுதிப்போட்டிக்கு கல்பிட்டி -B உலமாக்கள் அணி மற்றும் திகழி உலமாக்கால் அணி தகுதிபெற்றது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கல்பிட்டி-b உலமாக்கள் அணியை வீழ்த்தி திகழி உலமாக்கள் அணி வெற்றி பெற்றது. டி.எம்.ஆசிக்

தலுவ பகுதியில் விபத்து

 பஸ் மற்றும் லொறி விபத்துக்குள்ளானது. கற்பிட்டி  தலுவை பகுதியில் இன்று அதிகாலை சிறிய பஸ் ஒன்றுடன் லொறி ஒன்று மோதியதில் லொறி மற்றும் பஸ் இரண்டு வாகனங்களும் பாதை விட்டு விலகி கானில் விழுந்துள்ளது இதில் இரண்டு வாகங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தள தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.