பங்களாதேஷ் மற்றும் இலங்கை இரு அணிகளுக்குமான 2து டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் முடிவின் போது இலங்கை அணி 458ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தது பங்களாதேஷ் அணியை விடவும் மேலதிகமாக 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
இதில் பத்தும் நிஸ்ஸங்க 158,சண்டிமல் 93,குசல் மெண்டிஸ் 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் சார்பாக
தாஜுல் இஸ்லாம் 5,நயீம் ஹசம் 3,நஹீட் 1விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
மீண்டும் தனது 2து இனிங்சை தொடர்ந்த பங்களாதேஷ் ஆரம்பம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்காமல் தடுமாறினர்
இன்றைய 3து நாள் முடிவின் போது 115/6விக்கெட்டுக்களை இழந்தது இதில் முஸ்பிகூர் ரஹீம் 26,சாண்டே 19,அனாமும் 19ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 2, பிரபாத் ஜயசூரிய 2,திருண்டு 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பங்களாதேஷ் 96ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment