பங்களாதேஷ் மற்றும் இலங்கை இரு அணிகளுக்குமான 2து டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 78ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
தனது முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இதை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி 458 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்து பங்களாதேஷ் அணியை விட மேலதிகமாக 211ஓட்டங்களை பெற்றிருந்தது.
மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பங்களாதேஷ் அணியானது 133ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது,இதில் பங்களாதேஷ் சார்பாக முஸ்பிகூர் ரஹீம் 26, அனாமுல் ஹக் 19,மொமினுல் 15,சட்மான் இஸ்லாம் 12ஓட்டங்களை பெற்றனர்.
இலங்கை சார்பாக பந்துவீச்சில் பிரபாத் ஜயசூர்யா 5விக்கெட்டுக்களையும்,தனஞ்சய டி சில்வா ,ரத்னாயக்க தலா 2விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். இலங்கை அணியானது 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1சமநிலை 1வெற்றி என்ற அடிப்படையில் வெற்றிபெற்றுள்ளது.
Comments
Post a Comment