புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பிரதேசம் கண்டல்குடா மதனியா பாடல் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்வு நடைபெற்றது(10-01.2026)ம் திகதி நடைபெற்றது. இதன்போது அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பரிசுப்பொருட்களையும் பொது சமூக சேவைகள் அமைப்பினரால்(PSSO) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் தாகிர் ஹம்சார் அன்சார் மௌலவி அவர்களும், நிறுவனத்தின் கல்வி மற்றும் விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் சியாத் அவர்களும் கலந்து கொண்டதோடு இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகத்தினர்கள் முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியைகளும் பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 11/01/2026