இன்று (09/01/2026) ராஜாங்கனை, விகாரைக்கு அருகில் நடைபெற்ற அனுராதபுர மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மஹவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லேவ, மிஹிந்தலை மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ் உள்ள பிரதான வேலைத்திட்டமாக இந்த வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, அனர்த்தத்திற்குப் பிறகு, இருந்ததை விட சிறந்த நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டத்தை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும், மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமாயின், போதுமான வருமானம், பிளைகளுக்கு தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்ல வீடு, அத்துடன் மன அமைதியும் அவசியம் என்று சுட்டிக்காட்டியதுடன், அரசாங்கம் இதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் பெற்றோருக்கு சுமையாக இல்லாத, பிள்ளைகளுக்கு வேதனையற்ற கல்வி முறையை நாட்டில் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.



Comments
Post a Comment