இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3போட்டிகள் கொண்ட 20/20போட்டித்தொடரில் முதலாவது போட்டி இன்று தம்புள்ளயில் நடைபெற்றது.
நாணயசுழற்ச்சியில் வெற்ற பெற்ற பாக்கிஸ்தான் அணித்தலைவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாட சென்ற இலங்கை அணி ஆரம்பதுடுப்பெடுத்தாட்ட வீரர்களில் ஆரம்பம் சரியாக அமையாதனால் ஆரம்பத்திலே பாக்கிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள்.
இலங்கை அணிசார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் முன்னனி வீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை என்றுதான் கூறவேண்டும் இலங்கை சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் அதிகபட்சமாக
- ஜனித் லியானகே 40
- சரித் அலங்க 18
- வனிந்து ஹசரங்க 12
- பத்தும் நிசங்க 12
- தசுன் சானக்க 12 ஓட்டங்களை பெற்றனர் 10விக்கெட்டுகளை இழந்து 128ஓட்டங்ககை பெற்றது இலங்கை அணி.
பாக்கிஸ்தான் பந்துவீச்சு சார்பாக
- சல்மான் மிர்சா 3
- அப்ரார் அஹமட் 3
- சதாப் கான். 2
- வசீம். 2விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.
129 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி பாக்கிஸ்தான் அணி 16.4 ஒவர்கள் முடிவில் வெற்றி இலக்கை அடைந்தது
பாக்கிஸ்தான் சார்பாக ஆரம்பமே அதிரடியாக விளையாடிய பர்ஹான் 51 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்று ஆட்டமிழந்தார்.
சயிம் அய்யூப் 24,சல்மான் அகா 16,பக்கர் சமான் 5ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க சதாப் கான் ஆட்டமிழக்காமல் 18ஓட்டங்களைப்பெற்று தனது அணியை வெற்றியடையச்செய்தார்.
இலங்கை சார்பாக பந்து வீச்சில்
- தீக்சனா-1
- சமீரா-1
- ஹசரங்கா-1
- டி சில்வா -1விக்கெட்டையும் கைப்பற்றினர்
3போட்டிகள் கொண்ட இந்த 20/20தொடரில் 1-0என்ற அடிப்படையிப் பாக்கிஸ்தான் முன்னிலையில் உள்ளது.
செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் ஆசிக்
07/01/2026




Comments
Post a Comment