கல்பிட்டி பிராந்தியத்தின் சுற்றுலாத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் கண்டக்குழி கடற்கரைக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அதன் இறுதிப் பகுதி வீதி அபிவிருத்திப் பணிகளும் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே கண்டக்குழி கடற்கரை வீதி காபட் செய்யப்பட்டு இருந்த போதிலும், குறிஞ்சிப்பிட்டி டானியா ஹோட்டல் அருகாமையில் இருந்து கடற்கரை வீதியுடன் இணையும் சுமார் 200 மீட்டர் தூரம் சீரமைக்கப்படாமல் இருந்தது. சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் பெரும் சவாலாக இருந்த இந்தப் பகுதியும் தற்போது முழுமையாக காபட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் (World Bank) நிதி உதவியுடன், கல்பிட்டி பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்டக்குழி கடற்கரைக்கு செல்லும் அனைத்து வீதிகளும் இப்போது சீரான போக்குவரத்து நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
எமது பிரதேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் சுற்றுலாத் துறைக்கு வலுசேர்க்கும் வகையில், இத்திட்டத்தை முன்னெடுக்க ஒத்துழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும், உறுதுணையாக நின்ற உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தகவல்:-Fb




Comments
Post a Comment