நுரைச்சோலை பகுதியில் 2828 கிலோ கிராம் சட்டவிரோத இஞ்சி பறிமுதல்! நுரைச்சோலை சஞ்சிதவத்தை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 மூடைகளில் 2828 கிலோ கிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 33 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினருடனும், நுரைச்சோலை பொலிஸாருடனும் இணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீடுகளில் வலைவீச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகவல்களின்படி, இவ்வாறு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் இஞ்சி இந்தியாவில் இருந்து கடல் வழியாகப் பதுக்கப்படுவதாகவும், இது சிறந்த லாபம் தரும் குற்றவியல் வணிகமாக மாறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேகநபரும் சட்ட நடவடிக்கைக்காக நுரைச்சோலை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். 20/07/25
உள் நாட்டு,வெளி நாட்டு,விளையாட்டுச்செய்திகள்,அரசியல் செய்திகள் என்பவற்றை இங்கு பார்க்கமுடியும்