திரில் வெற்றியை பெற்றது இங்கிலாந்து
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3து டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
இங்கிலாந்து சார்பாக
- ரூட் 104
- பிரைடின் கேர்ஸ் 56
- போப், ஸ்டோகஸ் தலா 44 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற 387 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களை இழந்தது
இந்தியா சார்பில் பந்துவீச்சில்
- பும்ராஹ் -5
- சிராஜ்,நிதிஷ் ரெட்டி தலா 2
- ஜடேஜா -1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
தனது முதலாவது இன்னிங்க்ஸ் துடுப்பெடுத்தாட சென்ற இந்திய அணி இங்கிலாந்தைப்போல 387ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது
இந்தியா சார்பாக அதிகபட்சமாக
- ராகுல்-100
- ரிசப் பண்ட் -74
- ஜடெஜா-72 ஓட்டங்களைப்பெற்றனர்.
இங்கிலாந்து சார்பாக பந்து வீச்சில்
- கிரிஸ் வோக்ஸ்-3
- ஆச்சர்,ஸ்டோக்ஸ் தலா 2
- கேர்ஸ்,பசீர் தலா 1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
மீண்டும் தனது 2து இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது 190ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது
இந்தியாவின் பந்து வீச்சில்
- வாவிங்டன் சுந்தர்-4
- சிராஜ்,பும்ராஹ் தலா -2
- ரெட்டி,அகாஸ் டீப் தலா-1 ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
190என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி இறுதிவரை போராடியது இருந்தும் இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள் ஒருவருக்கொருவர் வெற்றிக்காக தங்களது மிகச்சிறந்த பந்துவீச்சு பிரதியை மேற்கொண்டனர் அதன் காரணமாக 22 ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றியை தனதாக்கியது.
இந்தியா சார்பாக ரவீந்திர ஜடேஜா இறுதிவரை தனது அணிக்காக போராடினார் இருந்தும் பயனளிக்கவில்லை
இந்தியா சார்பாக அதிகபட்சமாக
- ஜடேஜா -61
- ராகுல்-31
- கருன் நாயர்-14 ஓட்டங்களை அதிகபட்சமா பெற்றனர்.
இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில்
- ஆச்சர்,பென் ஸ்டோக்ஸ் தலா 3
- பைடன் கேர்ஸ்-2
- பசீர்,வோக்ஸ் தலா 1விக்கெட்டுக்களை பெற்றனர் .
22ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றி பெற்றது
5போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1என்ற அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
Comments
Post a Comment