இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்மானமிக்க போட்டியில் வெற்றிபெற்றது இலங்கை அணி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் போட்டியில் 2-1அடிப்படையில் வெற்றிகொண்டது இலங்கை அணி
1-1என்ற அடிப்படையில் சமநிலையில் இருந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று 8/7/2025 கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது
நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
இலங்கை சார்பாக
- பத்தும் நிசாங்க 34
- குசல் மெண்டிஸ்-124
- அசலங்க 54 அதிக பட்சமாக பெற இலங்கை 7விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப்பெற்றது .
- பங்களாதேஷ் பந்துவீச்சு சார்பாக
- தஸ்கின் அஹமட்,மஹ்தி ஹசன் தலா 2விக்கெட்டையும்,
- தன்சீம்,தன்விர் இஸ்லாம்,ஹொசைன் ஆகியோர் தலா 1விக்கெட்டையும் பெற்றனர்.
285என்ற வெற்றி இலக்கை நோக்கித்துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 186 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது
பங்களாதேஷ் சார்பக
- தவ்டி ஹரிடி 58
- பர்வீஸ் ஹூசைன்28
- மஹ்தி ஹசன்28 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர்.
- இலங்கை சார்பாக பந்து வீச்சில்
- அசித பெர்னாண்டோ,சமீரா தலா 3விக்கெட்டையும்
- வெல்லாலகே,ஹசரங்கா தலா2விக்கெட்டையும் கைப்பற்ற 99 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றியை தனதாக்கி தொடரை கைப்பற்றியது.
டி.எம்.ஆசிக்
09/07/2025
Comments
Post a Comment