சிலாவத்துறை பாடசாலை மாணவி பஹ்மா
தேசிய மட்டத்தில் 3 ஆம் இடம்
சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி F.பஹ்மா அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கான குறிக்கோள் வாசகங்களை (Motto) உருவாக்கும் அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் (தமிழ் மொழிப் பிரிவு) 3 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றிச் சான்றிதழ், நினைவுச் சின்னம், 25,000 ரூபா பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட பஹ்மா ஹுனைஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரோஸ்கான் - றினோசா தம்பதியரின் புதல்வியாவார்.
மாணவியின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
தகவல்:-Muhuseen Raisudeen(fb)
08/07/25
Comments
Post a Comment