Skip to main content

காணி விடுவிக்க உத்தரவு

 வர்த்தமானிகளின் மூலம் வனலாகா கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க உடனடி உத்தரவு.


இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது. 



கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஶ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  கந்தசாமி பிரபு,  ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.




இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி  (பா.உ) கலந்துகொண்டார்.


இதன்போது, சுற்றாடல்  அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


இன்றைய கூட்டத்தின் போது நான் பல்வேறு முன்மொழிவுகளை முன் மொழிந்த்திருந்தேன். அதனடிப்படையில்.


வனத்திணைக்களத்தின் 1985ம் ஆண்டு வர்த்தமானியில் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளவற்றை தவிர்த்து எமது மக்கள் பயிர் செய்கை செய்து வந்த பல ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியிருந்தது. இதனை கருத்திற்கொண்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட காணிகளை விட பின்னர் வந்த வர்த்தமானிகளின் மூலம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்குமாறு நான் முன்னைய அரசாங்க காலத்தில் 2023ம் ஆண்டு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம், அனைத்து பிரதேச செயலகங்களினாலும் குறித்த வர்த்தமானிக்கு மேலதிகமாக காடுகளாக காட்டப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பாக அறிக்கை தயார்செய்து வழங்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் பிரகாரம் காணிகளை விடுப்பதற்கு  வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை சுற்றாடல் அமைச்சர் புதிய வர்த்தமானியினை வெளியிடுவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னரும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு நிறைவேறாமல் சென்றுள்ளது. ஆகவே இந்த அரசாங்கமாவது இக்காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளார்.


புவிச்சரிதவியல் சுரங்கங்கள் அளவை பணியகம் (GSMB) ஆனது மேல்மண் மற்றும் ஆற்றுமண் அகழ்வு பத்திரங்கள் வழங்கும் போது பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட திணைக்களங்களின்  பிரசன்னத்துடன் களவிஜயம் மேற்கொண்டு அனைத்து திணைக்களங்களின் ஒப்புதலின் பின்னர் தான் வழங்க வேண்டும் என எனவும்.


அத்துடன், மண்ணகழ்ந்து சேமித்து வைக்கப்படும் களஞ்சியசாலை (Yard) மண்ணகழ்வுதாரர்கள் காட்டினை அண்டிய பகுதியில் வைத்து இரவு வேளைகளில் மண்ணகழ்வினை மேற்கொண்டு பகல் வேளைகளில் அதனை விநியோகம் செய்கின்றார்கள். ஆகவே இதனை பிரதான வீதிகளுக்கு அருகாமையில் உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்யக்கூடியவாறு அமைத்தல் வேண்டும். அத்துடன், இவ் நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தேவையான ஆளணி மற்றும் வாகன வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் எனது கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.


தகவல்:-பா உ சாணக்கியன் முகனூலில்

16/07/25

Comments

Popular posts from this blog

Abacusயினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சி

 ICAM Abacus கல்பிட்டி கிளையினால் நடத்தப்பட்ட *Regional Abacus Speed Maths Competition* ஜூலை 10 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஆலங்குடா Eye Institute இல்  வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ஆலங்குடா, திகழி, பள்ளிவாசல்துறை, கண்டல்குளி மற்றும் கல்பிட்டி ஆகிய கிளைகளிலிருந்தும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .  போட்டி நடைபெற்றதினத்திலே வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ICAM abacus பெயர் பொதிக்கப்பட்ட purse வழங்கப்பட்டது.. இந்நாளை வெற்றிகரமாக கழிக்கச்செய்த ICAM Abacus kalpity branch ஆசிரியைகளுக்கும் , Eye Institute க்கும்  நன்றியை தெரிவித்தனர். ஏற்பாட்டுக்குழுவினர். தகவல்:-The area Manger Alankuda Coaching Center 11/07/2025

உலமாக்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

உலமாக்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டி  ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 26/07/2025ம் திகதி ஆலங்குடா மெல்போன் மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படு இருந்தது இந்த தொடரில் கற்பிட்டி,திகழி,முதலைப்பாளி, ஆலங்குடா ஆகிய பிரதேசங்களில் இருந்து 6அணிகள் பங்குபற்றின இதில் இறுதிப்போட்டிக்கு கல்பிட்டி -B உலமாக்கள் அணி மற்றும் திகழி உலமாக்கால் அணி தகுதிபெற்றது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கல்பிட்டி-b உலமாக்கள் அணியை வீழ்த்தி திகழி உலமாக்கள் அணி வெற்றி பெற்றது. டி.எம்.ஆசிக்

தலுவ பகுதியில் விபத்து

 பஸ் மற்றும் லொறி விபத்துக்குள்ளானது. கற்பிட்டி  தலுவை பகுதியில் இன்று அதிகாலை சிறிய பஸ் ஒன்றுடன் லொறி ஒன்று மோதியதில் லொறி மற்றும் பஸ் இரண்டு வாகனங்களும் பாதை விட்டு விலகி கானில் விழுந்துள்ளது இதில் இரண்டு வாகங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தள தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.