நுரைச்சோலை பகுதியில் 2828 கிலோ கிராம் சட்டவிரோத இஞ்சி பறிமுதல்! நுரைச்சோலை சஞ்சிதவத்தை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 மூடைகளில் 2828 கிலோ கிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 33 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினருடனும், நுரைச்சோலை பொலிஸாருடனும் இணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீடுகளில் வலைவீச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகவல்களின்படி, இவ்வாறு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் இஞ்சி இந்தியாவில் இருந்து கடல் வழியாகப் பதுக்கப்படுவதாகவும், இது சிறந்த லாபம் தரும் குற்றவியல் வணிகமாக மாறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேகநபரும் சட்ட நடவடிக்கைக்காக நுரைச்சோலை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். 20/07/25
மன்னார் - விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார். தொடர்ந்து பின்லாந்து தேசத்தில் மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்று, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், (EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார். ATPL ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமத்தை பெற்றுள்ளார். இது ஒரு விமானி பெறக்கூடிய அதிக தரமான உரிமமாக இருப்பதுடன் இவ்வுரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain) பணியாற்ற முடிகிறது. விமானியாக...