Skip to main content

புத்தளத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய

 17/01/2026 இன்று  பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்கள் புத்தளத்தின் பல முக்கிய இடங்களுக்குசென்று பார்வையிட்டதன் பின்பு புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு விஜயம் செய்து அங்கு இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். இவ்விஜயத்தின்போது பிரதமருடன் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன,  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜே.எம். பைசல், கயான் ஜானக உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



செய்தி மூலம்- பைசல் பா.உ( Fb)

17/01/2026

Comments

Popular posts from this blog

ACTIVE KIDS KINDERGARTEN ALANKUDA வின் *Tiny* *Titans* *சிறிய* *கைகள்* *பெரிய* *சாகசங்கள்*

  2026/01/13 ம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் , ஆலங்குடா Eye Institute வளாகத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இதில் Active Kids Kindergarten இன் மழலைகள் தங்கள் திறமைகளை மிகவும் சிறப்பாகவும் ரசிக்கும் வண்ணமும் வெளிப்படுத்தினார்கள். இதற்காக பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் 👏. பிள்ளைகள் தங்கள் ஆடைகளையும் பெற்றோரின் ஆடைகளையும் நீருடனும் சலவை தூளுடனும் bubbles உடனும் விளையாடிய வண்ணம் மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் கழுவினார்கள். பார்ப்பதற்கு மிகவும் கண் கவரும் வகையில் இருந்தது.  மேலும் மிக அழகிய முறையில் பல வண்ணங்களில் chef உடையுடன் தங்கள் சிறிய கரங்களால் பழங்கள், மரக்கறிகளை வெட்டி தேங்காய் துருவி, உரல் கொண்டு இடித்து இன்னும் பல வகைகளில் பல விதமான கண்ணை கவரும் வண்ணங்களில் உணவுகளையும் பானங்களையும் தயாரித்தனர். குழந்தைகளுக்கு “எனக்கும் செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையையும், பொறுப்பு , சகிப்புத் தன்மை , படைப்பாற்றல் போன்ற மன நலம் சார்ந்த நன்மைகளை நோக்கமாக கொண்டே இந்நிகழ்வு *(Tiny Titans)* (*சிறிய கைகள் பெரிய சாகசங்கள்* )ஏ...

நூரானியா குர்ஆன் மத்ரசாவின் வருடாந்த கலை விழா

 ஆலங்குடா முல்லை-B பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நூரானியா குர்ஆன் மத்ரசா மாணவர்களுக்கான வருடாந்த கலை நிகழ்ச்சி 10/01/2026ம் திகதி நடைபெற்றது.       இந் நிகழ்வில் குர் ஆன் மத்iரஸா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பலதும் நடைபெற்றது.         இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இஸ்லாமிய கலாச்சார புத்தள மாவட்டத்துக்கான பணிப்பாளர் இப்ஹாம்(நளீமி) அவர்கள் கலந்துகொண்டார் .அவரோடு    அதிதிகளாக நுரைச்சோலை இப்றாஹிமியா அரபுக்கல்லூரியின் ஸ்தாபகர் முபாரக் மொளவியும்(ரசூலி) நுரைச்சோலை போக்குவரத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளும்,  ஆலங்குடாவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சனூன் அவர்களும் கலந்துகொண்டர்.    அவர்களுடன் ஆலங்குடா பள்ளி நிர்வாகங்களின் தலைவர்களும்  கலந்துகொண்டனர்.    கிராம மக்களின் பூரனஒத்துழைப்புடன் இந் நிகழ்வுகள்யாவும் நடைபெற்றது.      இந்த நிகழ்வினை நூரானியா பள்ளி பேஷ் இமாம் றஹிமூதீன்(அமானி) அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. தலைமைதாங்கினார்.               11/01...

ஜனாதிபதி யாழ் வீதியில்

இலங்கை நாட்டின் ஜனாதிபதி 16/01/2025 இன்று யாழ்ப்பாணத்தில் அதிகாலை வேலையில் நடைப்பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.     இது ஒரு பெரிய விடயாமா என்றால் இல்லை .வெளி நாடுகளில் ஆனால் ஆசியாவைபொருத்த மட்டில் குறிப்பாக இலங்கை நாட்டில் இது பெரிய விடயமே     ஏன் என்றால் இதற்க்கு முன் ஜனாதிபதியாக இருந்தவர்கள் வடக்கு மாகாணத்தில் ஒரு நாளில் வந்து சென்று விடுவார்கள் ஆனால் தற்ப்போதைய ஜனாதிபதி அவர்கள் அதற்க்கு மாற்றமாக உள்ளார்.    நேற்று(15/01/2026) மன்னார் காற்றாலை திட்டத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதே தினத்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கு தங்கி இன்று காலைப்பொழுதில் யாழ்ப்பாண வீதிகளில் நடைப்பயணம் செய்தது மக்களிடையே பெறும் வரவேற்ப்பைப்பெற்றுள்ளது.    அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் குறிப்பாக வடக்கு மக்களுக்குமிடையிலான ஒரு இணக்கம் காணப்படுகின்றது என்றே கூறமுடியும்.   செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பிரதேசம் கண்டல்குடா மதனியா பாடல் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்வு நடைபெற்றது(10-01.2026)ம் திகதி நடைபெற்றது. இதன்போது அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பரிசுப்பொருட்களையும் பொது சமூக சேவைகள் அமைப்பினரால்(PSSO) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் தாகிர் ஹம்சார் அன்சார் மௌலவி அவர்களும், நிறுவனத்தின் கல்வி மற்றும் விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் சியாத் அவர்களும் கலந்து கொண்டதோடு இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகத்தினர்கள் முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியைகளும் பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.       செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 11/01/2026