2026/01/13 ம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் , ஆலங்குடா Eye Institute வளாகத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இதில் Active Kids Kindergarten இன் மழலைகள் தங்கள் திறமைகளை மிகவும் சிறப்பாகவும் ரசிக்கும் வண்ணமும் வெளிப்படுத்தினார்கள். இதற்காக பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் 👏.
பிள்ளைகள் தங்கள் ஆடைகளையும் பெற்றோரின் ஆடைகளையும் நீருடனும் சலவை தூளுடனும் bubbles உடனும் விளையாடிய வண்ணம் மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் கழுவினார்கள். பார்ப்பதற்கு மிகவும் கண் கவரும் வகையில் இருந்தது.
மேலும் மிக அழகிய முறையில் பல வண்ணங்களில் chef உடையுடன் தங்கள் சிறிய கரங்களால் பழங்கள், மரக்கறிகளை வெட்டி தேங்காய் துருவி, உரல் கொண்டு இடித்து இன்னும் பல வகைகளில் பல விதமான கண்ணை கவரும் வண்ணங்களில் உணவுகளையும் பானங்களையும் தயாரித்தனர்.
குழந்தைகளுக்கு “எனக்கும் செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையையும், பொறுப்பு , சகிப்புத் தன்மை , படைப்பாற்றல் போன்ற மன நலம் சார்ந்த நன்மைகளை நோக்கமாக கொண்டே இந்நிகழ்வு *(Tiny Titans)* (*சிறிய கைகள் பெரிய சாகசங்கள்* )ஏற்பாடு செய்யப்பட்டது.
16/01/2026







Comments
Post a Comment