Skip to main content

Posts

Showing posts from August, 2025

ஆலங்குடா பாடசாலையில் இருந்து பல்கழைக்கழகம் தெரிவான மாணவர்களின் விபரம்

புத்தளம்,ஆலஙகுடா பாடசாலையில் இருந்து 2024/2025வருடத்துக்கு கல்வி பொதுத்தராதர பரீட்சையின் மூலமாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களின் விபரம் வெளியானது. இதில் 2மாணவிகள் முகாமைத்துவ பீடம் வவுனியாவுக்கும் 1மாணவி கொழும்பு பல்கழைக்கழகத்துக்கும் 2மேலும் இரண்டு மாணவிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் தெரிவாகியுள்ளார்கள்.    தகவல்:-பாடசாலை முகனூல்

பாடசாலை கரப்பந்தாட்ட அணிக்கு Jersey அன்பளிப்பு

 பாடசாலை கரப்பந்தாட்ட அணிக்கு Jersey அன்பளிப்பு ==================== திகழி பாடசாலையின் 20 வயதின் கீழ் கரப்பந்தாட்ட அணி நாளை (2025.08.03) மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது. எனவே இதற்கான Jersey ஐ முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் NTM தாஹிர் அவர்கள் தனது சொந்த நிதியின் மூலம் வழங்கி வைத்தார். இன்று Jersey ஐ பாடசாலை அதிபர் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர். முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் NTM தாஹிர் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. தகவல்:-பவுஸ்கான்(திகழி) 02/08/2025